• bharathi_kannamma 5w

    யாரோ? எவரோ.?
    ஏதும் அறியவில்லை..!
    நினைவுகள் பல சுமந்தாய்...!
    நிரந்தரமாய் உன் நினைவில் என்னையும் சுமந்தாய்..!
    உதிரம் தந்து உயிர் தந்தவளே....!
    உருவம் தந்து ரசித்தவளே...!
    அமுதமும் அளித்தாய்..!
    அத்துணையும் அனுபவித்தேன்..! உன்னை போல் பூமியில் பெண் உண்டோ.?
    விந்தை தான் மிஞ்சுகிறது...
    24 மணி நேரமும் உன்னை நினைத்திருப்பதில்லை..!
    ஆனாலும் நீ இன்றி நான் ஏது.?
    மறக்காமல் நினைவேது.?
    அன்னையை நினைவுக்கூற கூட ஒரு நாள்.!
    என்ன ஓர் அவலநிலை..?
    நெஞ்சு பொறுக்குதில்லையே.!
    மனம் முழுதும் நீயே தான்..
    மணம் கமழும் உன் முகம் தான்..
    காண்பித்தால் தான் அன்பு என்றால்..
    கண்கள் நீர் நிற்க தான் வே‌ண்டு‌ம்..
    அன்னை உன்னை நினையாத நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை..
    ஆனால் என் வாழ்வில் அர்த்தம் உண்டு...
    அதை புரிந்து கொண்டால் நம் வாழ்வு சிறக்கும்..
    ©bharathi_kannamma