• bharani_iyer 7w

    சிறைச்சாலை

    சிறகுகளை உடைத்த பறவைகளும்
    சிறகுகள் உடைந்த பறவைகளும்
    வாழும் ஒரு சிறிய வீடு

    பறக்க தெரிந்த பறவைகளும்
    பறப்பதை மறக்கும் அளவிற்கு
    கொடுமையான ஒரு நரக வீடு

    பூக்களை பறித்து விட்டு
    அதனை வளர்க்க முயல்தல்
    வண்டினை விரட்டி விட்டு
    தேனை எதிர்பார்த்து காத்திருப்பது

    ©bharani_kumar