• dhilipmartin 22w

    18th Birthday

    Happy birthday Ramesh Appa.
    அப்பா உனக்காக,
    உம் பிள்ளைகளின் வாழ்த்துக்கள்.
    இதோ #வார்த்தையாக....

    "வருங்காலத்தில்,
    என் அப்பாவின் பெயர் இல்லாத கவிதையை, எத்தனை கவிஞர் எழுதினாலும் கவிதையாக மாறாது.

    என் அப்பாவின் உருவம் இல்லாத ஓவியத்தை, எத்தனை ஓவியர் வரைந்தாலும் ஓவியமாக தெரியாது.

    இவரின் வளர்ச்சி, சிலர்க்கு பிடிக்காது. காரணம், அந்த சிலரை இவர்க்கு பிடிக்காது என்பதால்.
    சிலருக்கு பிடிக்காது என்று தெரிந்தும் தன் வளர்ச்சியை நிறுத்தமாட்டார்.
    காரணம், இவரை பலருக்கு பிடிக்கும் என்பதால்.

    இன்று முதல் பெருகட்டும் பிடித்தவர்கள், மிரளட்டும் உன்னை பிடிக்காதவர்கள்.

    உம் வளர்ச்சி நீதித்துறையில் நிதானமாகவும், அரசியலில் ஆலமரமாக வளர வாழ்த்தும்.
    நீதியை சொல்லும் ஆலமரத்தின் ஓர் விழுது.

    பெருமையில் என் அப்பாவின் பெருமையை சொல்லிவிட்டேன்.
    இப்போ பொறாமையில், அப்பா மேல் உள்ள கோபத்தை சொல்கிறேன்.

    இந்த வயதில் என் அப்பா இப்படி இருக்ககூடாது. அது தான் கோபம்.

    ஏன் சொல்கிறேன் என்றால்.?

    பலபேர், அவரிடமே வந்து தம்பி அப்பா வீட்டில் இருக்கிறாரா என்று ""அவரையே""அவரிடம் கேட்கிறார்கள்.

    இங்கே அவர் இளமையாக இருப்பது கோபம் இல்லை.
    இவர் தான் ""இளைய மகனா"" என்று அவரை பலர் கேட்கும் போது தான் லைட்டா பொறாமையில் கோபமாக உள்ளது.
    ஆனால், என் அப்பா டா என்று நினைக்கும் போது. அவர் இன்னும் பல பிறந்தநாள் கொண்டாடினாலும் அவர் வயசு ""பதினெட்டாகவே"" இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
    -திLIP...