• praburam19 6w

    அன்னை

    அனைத்து குறுஞ்செய்தி படித்துவிட்டு...
    அன்னை அவளை நோக்கி...
    அடுப்பாங்கரை பக்கம் சென்றேன்..
    அனல் பறக்கும் அந்த இடத்தில்...
    அரக்க பரக்க ஓடி கொண்டு...
    அடுப்பில் எதோ சமைத்து கொண்டு...
    அவளிடம் மெல்ல கூறினேன்....
    அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று...
    அலட்டிக் கொள்ளாமல்....
    அழகாய் சிரித்து அன்பாய் கேட்டாள்...
    அடுத்த வேளைக்கு என்ன வேண்டும் என்று..
    ©praburam19