• kavinghai 11w

    ஊருக்கு போகணும்

    வளர்ந்தாலும் மழலை அவள்..
    என் உறவும் இந்த ஊரில் இல்லை..
    என் நா(ய்)யகன்'உம் நான் வாழும் நகரத்தில் இல்லை...
    கொட்டி தீர்த்திடவோ அருகில் யாரும் இல்லை..
    நண்பனை எழுப்பவோ மனமே இல்லை..
    நான் என்செய்வதோ ஒன்றும் புரியவில்லை...


    நள்ளிரவில் நடுங்கி நினைந்தபடி வான் பார்த்து நிற்கிறேன்...
    வெண்ணிலவும் தன் வீடு சென்றதோ?
    மழலை கண்ணீரை துடைக்க மழைக்கு மட்டும் மனம் வந்ததோ?
    பாவம் உன்னையும் யார் அழ வைத்தாரோ?


    ஒளிரும் ஞாயிறு வருமென மழை காத்திருக்க..
    இருளும் வெள்ளி வருமென மழலை காத்திருக்க..
    பொழுதோ விடிந்தது..
    கண்ணீரோ வற்றியது..

    ©kavinghai