Grid View
List View
Reposts
  • kowsuvinash 2w

    கார்மேகமாய் திரண்ட புருவங்கள்..
    நெல்மணியின் உருவமாய் கண்கள்..
    வெண்மையில் கருவிழி அமைந்தாற் போல் கன்னத்தில் மச்சம்...இத்துனை அழகிலும், பேரழகாய் என்னை விட உன்னை அதிகமாய் தீண்டி என்னை பொறாமைப் பட வைக்கும் உன் தாடி... அம்சமாய் இருப்பினும் இப்பெதும்பையிடம் மாட்டி கொண்டாயா!...மாட்டிய கணம் முதல் இக்கணம் வரை என்நினைவில் நீ ஒரு சொப்பனமே....
    ©kowsuvinash

  • kowsuvinash 4w

    கண்களின் இமைகளும் விழிக்க விமர்ச்சிக்கிறது..நீ இல்லா நேரத்தில்..
    அதே இமையே சிமிட்டலையும் மறந்து ரசிக்கிறது...நீ இருக்கும் தருணத்தில்...என் இமையை குத்தகைக்கு எடுத்து என்னை ஆட்டிப் படைப்பது ஏனடா...?
    ©kowsuvinash

  • kowsuvinash 4w

    காலை கதிரவன் முதல் நித்திரையின் நிலவு வரை உன்னை என்னுள் ஆழ்த்துகின்றன..ஆழ்த்தும் கதிரவனோ! அவனை நினைத்து வேலையை துவங்கு என்கிறான்..சந்திரனோ! அவனை நினைத்து நித்திரைக் கொள் என்கிறான்....மத்தியில் மதிமயங்கி உன்னை இதயவால்வுகளாய் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றேன்..
    ©kowsuvinash

  • kowsuvinash 4w

    காவியத்தில் கதைத்த காதல்...காலத்தில் கசக்குதடி....பிரிவு என்ற மரணப்படுக்கையில் மரணித்தோம்...என்றும் எழா உயிர்களாய்...
    ©kowsuvinash

  • kowsuvinash 5w

    கண்களின் விளிம்பில் நீர் ததும்பையில் உன்னை சேர்ந்திட வேண்டும்... உன் துன்ப வலையில் நானும் பிண்ணி கொள்ள வேண்டும்..உன் வேர்வைத் துளியை விரட்டி விட்டு உன்னில் ஊடுருவ வேண்டும்..உன் மூச்சை சிறையிட்டு அதனை என்வாயிலாய் நீ ஆட்கொள்ள வேண்டும்... ஆடையாய் மாறி உன்னை அரவணைக்க வேண்டும்...சோம்பலாய் மாறி உன்னை ரசிக்க வேண்டும்...நான் நீயாக..நீ நானாக..நாம் என்ற உணர்வில் தழைத்திருப்போம் என் தங்கமே..
    ©kowsuvinash

  • kowsuvinash 5w

    பல மணிதுளிகள் கதைத்தோம்...பல குறுஞ்செய்திகள் பகிர்ந்தோம்.. சிலசில சினுங்கள்..பலபல புன்முறுவல்கள் இருந்தாலும்..உன்னை என் கருவிழிக்குள் புகுத்தி உன் மூச்சுக்காற்றை யாசிக்கும் தருவாயை எண்ணி மனம் காத்துக் கொண்டிருக்கிறது...என் அன்பே
    ©kowsuvinash

  • kowsuvinash 5w

    மொழிகள் தேவையில்லை நாம் கதைத்திட...செயலிகள் தேவையில்லை நாம் பகிர்ந்திட...பல மைல்கள் தடையாக இருந்தாலும், நொடிக்கும் குறைவான நேரத்தில் நம் நினைவுகள் நம் மனதில் நிலைத்து நம்மை ஒருங்கிணைக்கும் தங்கமே....
    ©kowsuvinash

  • kowsuvinash 6w

    நீ என்னுடயவன் என்பதை விட...நான் உன் உடையவள் என்பதில் மனம் நெகிழ்கிறது....
    ©kowsuvinash

  • kowsuvinash 6w

    காவிய காதலியாய் நான்...சமகால காதலனாய் நீ...இருவருக்கும் இடையே ஊற்றாய் காதல்..காவியம் சமகாலத்தில் பயணிக்க அனுமதிப்பாயா?
    ©kowsuvinash

  • kowsuvinash 6w

    இரட்டை கிளவியாய் நாம்....பிரித்தால் அர்த்தம் இல்லை....
    ©kowsuvinash