Grid View
List View
  • kowsuvinash 11w

    காவியத்தில் கதைத்த காதல்...காலத்தில் கசக்குதடி....பிரிவு என்ற மரணப்படுக்கையில் மரணித்தோம்...என்றும் எழா உயிர்களாய்...
    ©kowsuvinash

  • kowsuvinash 11w

    கண்களின் விளிம்பில் நீர் ததும்பையில் உன்னை சேர்ந்திட வேண்டும்... உன் துன்ப வலையில் நானும் பிண்ணி கொள்ள வேண்டும்..உன் வேர்வைத் துளியை விரட்டி விட்டு உன்னில் ஊடுருவ வேண்டும்..உன் மூச்சை சிறையிட்டு அதனை என்வாயிலாய் நீ ஆட்கொள்ள வேண்டும்... ஆடையாய் மாறி உன்னை அரவணைக்க வேண்டும்...சோம்பலாய் மாறி உன்னை ரசிக்க வேண்டும்...நான் நீயாக..நீ நானாக..நாம் என்ற உணர்வில் தழைத்திருப்போம் என் தங்கமே..
    ©kowsuvinash

  • kowsuvinash 11w

    பல மணிதுளிகள் கதைத்தோம்...பல குறுஞ்செய்திகள் பகிர்ந்தோம்.. சிலசில சினுங்கள்..பலபல புன்முறுவல்கள் இருந்தாலும்..உன்னை என் கருவிழிக்குள் புகுத்தி உன் மூச்சுக்காற்றை யாசிக்கும் தருவாயை எண்ணி மனம் காத்துக் கொண்டிருக்கிறது...என் அன்பே
    ©kowsuvinash

  • kowsuvinash 11w

    மொழிகள் தேவையில்லை நாம் கதைத்திட...செயலிகள் தேவையில்லை நாம் பகிர்ந்திட...பல மைல்கள் தடையாக இருந்தாலும், நொடிக்கும் குறைவான நேரத்தில் நம் நினைவுகள் நம் மனதில் நிலைத்து நம்மை ஒருங்கிணைக்கும் தங்கமே....
    ©kowsuvinash

  • kowsuvinash 12w

    நீ என்னுடயவன் என்பதை விட...நான் உன் உடையவள் என்பதில் மனம் நெகிழ்கிறது....
    ©kowsuvinash

  • kowsuvinash 12w

    காவிய காதலியாய் நான்...சமகால காதலனாய் நீ...இருவருக்கும் இடையே ஊற்றாய் காதல்..காவியம் சமகாலத்தில் பயணிக்க அனுமதிப்பாயா?
    ©kowsuvinash

  • kowsuvinash 12w

    இரட்டை கிளவியாய் நாம்....பிரித்தால் அர்த்தம் இல்லை....
    ©kowsuvinash

  • kowsuvinash 13w

    அழகு பெதும்பைகள் உன்னை சுற்றி வளைத்தாலும்...ஆயிரம் ஆசை வார்த்தைகள் கூறினாலும்,ஐயம் இல்லை அன்பே...ஏனெனில் என்னை தவிர வேறு யாராலும் உன்னை அன்பு சித்திரவதைக்குள் ஆட்கொள்ள முடியாது..நீரும் மீனுமாய்..நிலவும் நட்சத்திரமாய்..கண்ணும் இமையுமாய்...அதுபோல்..என்றும் நீயும் நானுமே என் தங்கமே...
    ©kowsuvinash

  • kowsuvinash 13w

    வருணன் வந்தால் குளிர்காற்றாய் சீண்டுகிறாய்.. கதிரவன் காலடி வைத்தால் அனலாய் என்னுள் வட்டமிடுகிறாய்..அங்கும் இங்கும் அலைந்து என்னை திசைதிருப்பினால்... மனதோ...உன்னை நினைக்க சொல்லி காலில் விழுகிறது...என் பாலபோன மனமே...முற்றிலும் மூழ்கி அவனிடம் முக்காலி இட்டு அமர்ந்து அடம் பிடிக்கிறாயே .....
    ©kowsuvinash

  • kowsuvinash 14w

    என் துயிலை கடன் வாங்கி என் கனவிலும் வந்து உன் தீண்டலை ஊட்டுகிறாய்...உன் தீண்டலில் உயிர்தெழுந்தால் விடியலைக் கடன் வாங்கி என் நினைவை ஆட்கொள்கிறாய்...இப்படி என்னை ஆட்டிப்படைத்தால் நான் என் செய்வேன்?என் பாலகனே......
    ©kowsuvinash