Grid View
List View
  • luisa_mary 5d

    ஆட்சிக்கொள்

    வையம் பரந்தாய் நீ...
    காற்று என்றனர் உன்னை...
    காற்றாய் வந்தாய் நீ...
    புயல் அச்சம் கொண்டனர் பலர்...
    புயலென தோன்றினாய் நீ...
    தென்றல் என்றனர் சிலர்...
    தென்றலும் தந்தாய் நீ...
    வெப்பம் உணர்ந்தவர்க்கு...
    வெப்பமும் ஆனாய் நீ...
    பனி என நடுங்கினர் உன்னில்...
    பனிக்கும் வித்திட்டாய் நீ...
    இசையும் கண்டனர் உன்னில்...
    இசையையும் சுரந்தாய் நீ...
    உயிர்மூச்சினை ஈன்றாய் நீ...
    கடைமூச்சினை பரித்தாய் நீ...
    உருவற்று திரிந்தாய் நீ...
    உணர்வு மட்டும் கொடுத்தாய் நீ...
    உண்மை என நின்றாய் நீ...
    உயிராயும் எங்கும் நின்றாய் நீ...

    எதுவாக நினைத்தாலும்...
    அதுவாக மாறினாய் நீ...
    காற்றே... புயலே...
    தென்றலே... வெப்பமே...
    பனியே... இசையே...
    உயிரே... உணர்வே...
    இயற்கையின் அடிப்படையே!
    இன்னும் ஆட்சிக்கொள்,
    என் உள்ளத்தை!...

    ©luisa_mary

  • luisa_mary 2w

    YOU

    Sometimes the own you may give, tough competition to you!...

    ©luisa_mary

  • luisa_mary 2w



    இல்லை...
    முடியாது...
    நடக்காது...
    வாய்ப்பில்லை...
    வேண்டாம்...
    கடினம்...
    செய்யலாகாது...
    நடக்கவரிது...
    விட்டுவிடு...
    கவனிக்காதே...
    கைவிடு...
    தேவையில்லை...

    இன்னும் இன்னும் பல...
    உடைத்தெரிவோம்...
    தகர்த்திடுவோம்...

    மூளையற்ற எதிர்மறைக்
    கருத்துக்களை!...

    ©luisa_mary

  • luisa_mary 3w

    வருடுதடி...

    சில நேரம் சிந்தனை நிரம்பிய
    வார்த்தைகளுக்கும்...
    வனப்பு பொதித்த எழுத்துகளுக்கும்...
    சில நேரம் வண்ணங்கள் ஔிக்கும் ஓவியங்களுக்கும்...
    எண்ணங்கள் ஒலிக்கும் காவியங்களுக்கும்...
    சில நேரம் கண்கள் பறிக்கும் கலையழகுக்கும்...
    பண்கள் மிளிர்க்கும் இசையசைவுக்கும்...
    சில நேரம் நயங்கள் மயக்கும் ராகக்கருவிக்கும்...
    தாளங்கள் குதிக்கும் பாடலருவிக்கும்...
    சில நேரம் சாளரம் திறந்த தென்றல் வருகைக்கும்...
    புதுமையாய் தோன்றும் மலர் மொட்டுக்கும்...
    சில நேரம் ஓட்டம் பிடிக்கும் நீர் வழிதலுக்கும்...
    நாட்டம் கொடுக்கும் பசுமை வனங்களுக்கும்...

    இன்னும் சில சில நேரம்...
    இயற்கை எழிலுக்கும்...
    கலையின் மகிழ்வுக்கும்...
    கவிதை செழிப்புக்கும்...
    கண்கள் மயங்குதடி...
    இரு கண்களுடன் சேர்ந்து,
    நெஞ்சமும் மயங்குதடி...
    என் நெஞ்சமுடன் கூடி,
    நோக்கம் பெருகுதடி...
    எம்மனம் அதிருதடி...
    மனதை வருடுதடி...
    என் மனதை மெல்ல வருடுதடி...

    ©luisa_mary

  • luisa_mary 3w

    அலையழகே!...

    எத்தனை தொலைவு?
    எத்தனை தூரம்?
    எப்படி வந்தாய்?
    என்னவெல்லாம் கண்டாய்?
    எதை கொண்டு வந்தாய்?
    எவை கண்டு வந்தாய்?
    கரைக்காண வந்தாயோ?
    கனவை அடைய வந்தாயோ?
    போட்டிப் போட்டு வந்தாயோ?
    பாட்டன் வழித் தேடி வந்தாயோ?
    முடிவு என தெரிந்து வந்தாயோ?
    முடிவாய் என அறிந்து வந்தாயோ?
    மோட்சம் சேர வந்த உனக்கு...
    என் பாதம் சேர, முடிந்து போனாயே!...

    ஆனாலும் என்ன...
    உன் வனப்பு ரசிக்க காத்து நிற்கும் இந்த மானிடம்!...

    ©luisa_mary

  • luisa_mary 3w



    Be careful with literature people...

    If others analyse the problem...
    They do critical analysis for the same problem...

    Careful with these literatures!...

    ©luisa_mary

  • luisa_mary 3w

    பாரப் பாட்டு

    ஓடி விளையாடும் பாப்பா...
    நான் பொதுத்தேர்வு
    எழுதவிருக்கும் பாப்பா...
    கூடி விளையாடும் பாப்பா...
    கல்வி மன அழுத்தவிருக்கும் பாப்பா...
    காலை எழுந்தவுடன் படிப்பு...
    பின்பு கவலைக்கொடுக்கும் அதே படிப்பு...
    மாலை முழுதும் கூட படிப்பு...
    என்று வழக்கப் படுத்திய பாப்பா...
    சின்னஞ்சிறு புத்தகம் போல...
    பைக்குள் அடைந்துக்கிடக்கும் பாப்பா...
    வண்ணப் பறவைகள் கண்டு...
    மனதில் பாரம் சுமக்கும் பாப்பா...

    ஓட முயலும் பாப்பா...
    நான் பொதுத்தேர்வு
    எழுதவிருக்கும் பாப்பா...
    ஓட முயலும் பாப்பா!...

    ©luisa_mary

  • luisa_mary 4w

    ஒலிக்கட்டும்...

    உயிர் மொழி தமிழ் இருக்க...
    புதைந்த மொழி எதற்கு...
    தமிழ் வழிபாடு வசம் இருக்க...
    இரவல் வழிமுறை எதற்கு...

    இறைப்பற்று தனி உணர்வாகும்...

    மொழிப்பற்று இன உணர்வாகும்...

    ஒலிக்கட்டும் எங்கள் இறைத்தளங்களில்...

    தமிழ் இயலும் இசையும்!...
    தமிழ் மரபும் நெறியும்!...

    ©luisa_mary

  • luisa_mary 4w

    Confusions

    Stop it...
    Or
    Solve it...
    Never keep it...

    ©luisa_mary

  • luisa_mary 4w



    எத்தனை கடினங்கள் தாங்கியது...
    என் இதயம்!...

    தூள் தூளாய் சிதரியதே...
    உன் விழியின் தாக்கம் பட்டு!...
    தேடிக்கொண்டிருக்கிறேன்...
    சிதறிய தூள்களை!...

    கிடைக்குமா?...
    அனைத்தும் மற்றும் ஒருமுறை!...

    ©luisa_mary