• rosika 24w

    நீ சொல்வாயா
    என் இதயம் அழகாய்
    துடிப்பதற்கு காரணம்,
    நீ சொல்வாயா
    என் கன்னத்தின்
    சிவப்பிற்கு காரணம்,
    நீ சொல்வாயா
    என் தனிமையும் அழகாய்
    மாறியதற்கு காரணம்,
    நீ சொல்வாயா
    என் உதட்டில்
    காரணமின்றி தோன்றும்
    புன்னகைக்கு காரணம்,
    நீ சொல்வாயா
    இரவில் உறங்காமல்
    நிலவிற்கு துணை
    இருப்பதற்கான காரணம்,
    நான் சொல்லட்டா
    உன் காதல்
    தான் காரணம் என்று.....
    ©rosika