• rajeshezham 6w

    அந்த மேகக் கூட்டங்கள் சற்று நின்றன
    கீழ் இறங்கி வந்து ரகசியம்
    சொல்வதாய் கண் அசைத்தது
    காற்று தன் வேளையை தொங்கியது
    விடைபெற்ற மேகங்கள்
    அடுத்த ஊர் நோக்கிய பயணத்தை ஆரம்பித்து, மீண்டும் கண் அசைக்க தொடங்கின
    அடுத்த மேகக் கூட்டங்கள்
    அதுவும் எந்த ரகசியமும் சொல்லாமல்
    அடுத்த ஊர் நோக்கிய பயணத்தை ஆரம்பித்து,
    பெரும்பாலான நாட்களில் சொல்லவந்த ரகசியத்தை சொல்லாமல் பயணிக்கும் மேகங்கள்
    ஒரு சில நாட்களில் மட்டும்
    ரகசியத்தை அடக்க முடியாமல்
    கண்ணீர் விட்டு அழுது விடுகிறது மழையாக
    இருந்தும் எந்த ரகசியமும் சொல்லாமலேயே
    பயணிக்கிறது அந்த மேகங்கள்.

    -ராஜேஷ்.
    ©rajeshezham