• karthik_murugan 23w

    அவளின் காவியம்...15

    மாலைமங்கும் வேளையிலே
    அழகான அந்த மாலையிலே
    அவள் ஓடி விளையாடும் அழகைப் பார்த்தால்
    வீடு செல்ல அடம்பிடிக்கும் அந்த ஆதவனும்
    அவள் அருகில் வந்து அழகை கண்டால்
    மண்ணில் மயங்கி வீழ்வோம் என்றே
    அந்த நட்சத்திரங்கள் தூரம் நின்றே அவளைப் பார்க்கும்
    அவள் துகில் கொள்ளும் அழகைக் காண
    அந்த வெண்ணிலாவும் அவள் வீட்டு விலாசம் கேட்கும்...
    ©karthik_murugan