• vidhyakrishnan 9w

    கற்பனைகளில் மிதந்து
    கவிதைகளில் புரண்டு
    அலைபேசி அழைப்பில் ஆனந்தம் கொண்டு
    முடிவில்லா பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளியாய் முத்தத்தை கையூட்டாக பெற்று
    குறுஞ்செய்திகளில் குறும்புகள் செய்து
    எட்ட‌ நின்று ஏக்கமாய் பார்த்து வாழும் இந்த வாழ்க்கை போதுமடா...
    ஊர் அறிய உன்‌ கரம் பற்றி உன்னவளாகி...
    அனுதினமும் உன் சின்ன சின்ன சிண்டலிலும் அன்பிலும் திக்குமுக்காடி
    காற்றை போல் உன் வாசம் எப்போதும் எந்தன்‌மீது ஒட்டி உறவாடி
    சண்டைக்கும் சமாதானத்திற்கும் முத்தத்தையே தண்டனையாக பெற்று...
    காலை முதல் உன்னை இம்சித்து இரவில் அனைத்தும் மறந்து ஒன்றும் அறிய மழழையாய் மாறி உன் மார்பினில் துயில் கொள்ளும் நாளை எண்ணி காத்திருக்கிறாள் இந்த பேதை...

    Read More

    ©vidhyakrishnan