• shinodolly 4w

    பிழையின்றி நீ மொழிபேச
    பிறர் இன்றி எனக்குள் நான் கதை பேச
    மொழி பெற்ற பாக்கியமா
    இல்லை நான் பெற்ற பாக்கியமா
    உன் இதழ் வழியே வந்த என் பெயர்
    என் காதுக்குள் ஓயாது தொனிக்க
    என் பெயரை ரசித்த தருணம் அல்லவா அது
    உன் பெயரை உச்சரிக்கும் பொழுது
    குவியும் என் இதழ்கள்
    உன்னை நினைத்திடும் பொழுது
    தானாய் விரிந்திடுதே...
    ©shinodolly