• kaanal_kavingan 24w

  உன்புருவ வில்லைக் கொண்டு

  காதல் அம்பை எய்வாயா?

  உன்னிதழின் ஈரம் கொண்டு

  என் உலரிதழை நனைப்பாயா?

  காதோர கம்மல் கொண்டு

  ஊஞ்சல் செய்து தருவாயா?

  உன் அகன்றநெற்றி கொண்டு

  உறங்க கட்டில்செய்து தருவாயா? -உடன்

  உன்கண்ண மெத்தை சேர்த்து

  படுக்கை செய்து தருவாயா?

  உன்கூந்தல் முடியைக் கொண்டு

  காதல்வலையில் சிக்க வைப்பாயா?
  ©fact_vs_fate