• cibiksha 5w

    பிரியாவிடை

    "Farewell" நடக்குமோ? நடக்காதோ?
    என்ற குழப்பத்தில் இருந்தோம்-மார்ச் மாதம்,
    நடக்காது என்று நினைத்துக்கொண்டு,
    கண்ணீர் சிந்தினோம் - ஏப்ரல் மாதம்,
    வருந்தினோம் - மே மாதம்,
    பக்குவம் அடைந்தோம்- ஜூன் மாதம்,
    மனதை தேற்றினோம்- ஜூலை மாதம்
    ஆனால் நீங்களோ,
    எங்கும் நடத்தலாம்,
    எதிலும் நடத்தலாம்,
    என்பதை நிரூபித்து விட்டீர்கள்
    எங்களின் பாசமான தங்கைகளே;
    (வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற வாக்கின்படி)
    தெய்வத்தின் அருள்வாக்குகள்,
    ஆசிரியர்களின் ஆசிர்வாதங்கள்,
    குட்டி குட்டி கவிதைகள்,
    பல நினைவுகளை நினைவூட்டும் காணொளிகள்,
    அன்பு தங்கைகளிடமிருந்து வந்து அன்பான வார்த்தைகள், பாடல்கள்,
    எங்கள் படத்தில்
    உங்கள் இதயத்தை பறைசாற்றிய டிஜிட்டல் பரிசுகள்,
    கடைசியில்
    ஃபிளாஷ் ஒளியுடன்
    எங்கள் வாழ்வும் ஒளிபெற வாழ்த்திய
    அத்துணை நல்லுள்ளங்களுக்கும்
    இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
    We love u all And miss u lotzzz all my sisters
    ©cibiksha