• thuraivan 24w

    மினி கதை

    Read More

    புள்ளிகள்

    காரசாரமான விவாதம் எதைப் பற்றி என்று அவர்களுக்குள் மட்டுமே புரியும். " நான் சொல்றதைக் கவனமாகக் கேள் " என்கிறார் ஒருவர். " நான் சொல்றதைக் கேள். சரியாக இருக்குமா என்று பார்" என்கிறார் இன்னொருவர். இருவர் சொல்வதையும் அவர் கேட்கிறார். அறிவு மயக்கம், தவிப்பு. யோசிக்க அவகாசமில்லாத ‌தொடர்பேச்சு. பிரச்சனைக்குத் தீர்வு காணவே பேச்சு பரிமாற்றம். விவாதமே விபரீதமாய் உருவாகிவிடக்கூடாது அல்லவா. . விவாதம் எப்பொழுதும் காற்புள்ளிதான் தீர்வுதான் முற்றுப் புள்ளி.
    ©thuraivan