• thuraivan 23w

    மினி கதை

    Read More

    கார்ட்டூன்கள்

    பணிக்கு செல்லும் பெற்ற தாய் தந்தையர், குழந்தைகளோடு கொஞ்சிப் பேசிட நேரமில்லை. சேர்ந்து சாப்பிட, விளையாட நேரமில்லை. அவ்வளவு அவசரம். பரபரப்பு. பதற்றம். குழந்தைகள் தனிமையில் ஏதேனும் கேட்டால், அதன் வாயை அடைப்பதற்குக் கொஞ்சம் நொறுக்குத்தீனி கொடுப்பது, அதட்டுவது, அடிப்பது, அழாமலிருக்க தொலைக் காட்சி பார்க்க விடுவது. ஆமாம், இப்போது குழந்தைகள் சுட்டி, போகோ, கார்ட்டூன்கள் பார்த்து சிரிக்கிறார்கள். பேசிக் கற்கிறார்கள். மௌனமாய் இருக்கப் பழகுகிறார்கள்.
    சின்னத்திரை வீசுகிறது வலை.
    அதில் குழந்தைகள் சிக்கி வீழ்வதால், பெற்றார்க்குப் பெருங்கவலை.
    ©thuraivan