• deeparajmal 5w

    கதையின் தலைப்பு: நேசம்
    எழுத்து மற்றும் இயக்கம்: ரா. தீபாராஜ்மல்
    தேதி: 10/10/2019


    நேசம்!!!

    அவளைக் கண்டேன்!!!
    நீல்கிரீஸ் கடையின் பூங்காவில்!!!
    இடம்: ஈ.வெ.ரா சாலை, டெய்லர்ஸ் சாலை, ஈகா திரையரங்கிற்கு அருகில், , கீழ்ப்பாக்கம், சென்னை!!!!!


    பலபேர் பேருந்திற்காக காத்துக்கொண்டு
    இருந்த அதே பேருந்து நிலையத்தில் தான் நானும் ஒருத்தியாக நின்று கொண்டிருந்தேன்!!

    ஆனால் "அவள்" மட்டும் எனக்காகவே
    காத்துக் கொண்டிருந்தாள்.

    இதை உணர்ந்தும் நான் எப்படி அவளை விட்டுவிட்டு செல்வேன்????

    என் உள் மனது என்னிடம் சொல்லியது
    அவளை விட்டுவிட்டு சென்று விடாதே!!!

    அவள் உனக்காகத்தான் காத்து கொண்டு இருக்கிறாள்.

    மனம் மட்டும் தான் பேசிக் கொண்டு இருக்கின்றது. ஆனால்,
    அவளை என்னால் தொட முடியவில்லை.

    ஆனாலும் எனக்கு எட்டாத தூரத்தில் அவள் நின்றுகொண்டிருந்தாள்.

    நான் காத்துக் கொண்டிருந்த தருணத்தில்
    ஒரு சகோதரர் அந்தப் பக்கம் வந்தார்.

    நான் அவரிடம் கூறினேன் அண்ணா அவளை
    என்னால் அழைக்க முடியவில்லை தாங்கள் எப்படியாவது அவளை என்னிடம் சேர்த்து விடுங்கள் என்று.

    அந்த சகோதரும் பதிலுக்கு
    அப்படியே ஆகட்டும் சகோதரி என்று கூறினார்.

    அவர் என்னிடம் அவளை ஒப்படைத்தார் பிறகு நான் அவருக்கு எனது நன்றியை கூறினேன்.
    நான் அவளுடைய "கருவை" பாதுகாப்பாக "விதைத்தேன்" அவளோ "முளைத்து விட்டால்".

    மனதிற்குள் இனம் புரியாத ஏதோ ஒரு மகிழ்ச்சி அவளை வளர்த்து விட்டேன் என்று.

    Read More

    விதை

    விதையாக வந்தவளை
    செடியாக வளர்த்து விட்டேன்!!!!©deeparajmal
    10/10/2019