• themoonchild_97 23w

    உயிர் கொண்ட போது கெஞ்சினேன் இல்லையென துரத்தி அடித்தாய்
    உயிர் மாண்ட பின் பொன்னாய் கால் முன் ஸமர்பித்தாய்

    மனிதநேயம் இன்றி புகையால் குண்டடித்து விரட்டினாய்
    சாம்பல் புகையாய் மண்ணுல் சென்ற பின் நினைவாலையம் கட்டினாய்

    இன்னும் சித்திறவதைகளை கண்டு பீதி அடைவேன் என்று தான் என் இறு கண்களை மூடி விட்டார்களோ

    வாழ்க்கை எனும் கண்காட்சிக்கு நான் குடுத்த கட்டணத்தில் மிஞ்சியது ஒற்றை ரூபாய் என்று தான் என் நெற்றிக்கண்ணில் ஒற்றி விட்டார்களோ

    என் இறுதி ஊற்வலத்தில் என் பின்னே வரும் சுயநலவாதிகளை கண்டு பயந்து ஓடிவிடுவேன் என்று தான் என் கால் பெறுவிரல்களை இணைத்து கட்டினார்களோ

    இவை அணைத்தும் பார்த்து சகிக்காமல் என் மனக்கதறளை அமைதிப்படுத்த தான் வெடி வெடித்து மகிழ்ந்தார்களோ