• deeparajmal 6w

    காதல் / உயிர்/ உணர்ச்சி
    ________________________

    கேள்வி: காதல் என்றால் என்ன???

    பதில்: உணர்ச்சி

    கேள்வி: காதல் உடலால் ஆனதா (அ) உயிரால் ஆனதா???

    பதில்: உயிர்களுக்கும், உணர்வுகளுக்கும்
    இடையே உண்டாவது தான் காதல்!!!

    பறவையும், மனிதியும்!!!

    இவளுக்கும் இந்த பறவைக்கும்
    உண்டான காதல்.

    இவர்களின் காதல்
    "உடலைப் பற்றி பேசவில்லை"
    "உயிரைப் பற்றி பேசுகின்றது".

    இது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும்
    இடையே உண்டான காதல் அல்ல,
    "தாலி கட்டி திருமணம் முடித்து" இதனை
    இந்த உலகத்திற்கு நிரூபித்து காட்டுவதற்கு.

    இது மதத்தால், இனத்தால்,
    மொழியால், படிப்பால்,
    பதவியினால் உருவான காதல் அல்ல எதிர்ப்பதற்கும், வித்தியாசம் பார்ப்பதற்கு.

    இது அழகினால் வந்த காதல் அல்ல
    அன்பினால் உருவான காதல்.

    இவ்வுலகத்தில் உள்ள
    எல்லாவற்றையும்
    தாண்டி புனிதமானது
    இந்த உயிராலான காதல்.

    உயிர், உணர்வு, அன்பு, பாசம்
    இதுதான் உண்மையான காதல்.


    இந்த உயிர் காதலை
    கொண்டாடுவதற்கும்,
    போற்றுவதற்கும்
    அழகோ!
    நிறமோ!
    நகையோ!
    பணமோ!
    பதவியோ!
    பரிசோ!
    எதுவுமே தேவையில்லை.

    இவர்களின் காதலில்
    சண்டை இல்லை,
    சச்சரவு இல்லை,
    அழுகை இல்லை,
    துன்பமில்லை,
    ஏற்றத்தாழ்வு இல்லை.

    இசை எனக்கு கொடுத்த பரிசு
    "அவளின் மழலைப் பேச்சு"
    நான் இசைக்கு கொடுத்த பரிசு
    வாழைப்பழம் மற்றும் பல பழங்கள்.

    எங்களின் "உடல்" மட்டும் தான் பிரந்துல்லது.

    எங்களின் "உயிருக்கும், உணர்விற்கும் பிரிவே கிடையாது".

    Read More

    எங்களின் உடலுக்கு
    மட்டும் தான்
    பிரிவே தவிர
    உயிருக்கும்,
    உணர்வுகளுக்கும் அல்ல.

    This post dedicated
    to my dear "Isai".
    ©deeparajmal
    08/10/2019