• soulful_linesofheart 64w

    இருளோடு உதிக்கும்
    அவள் நிழலோடு கைகோர்த்து
    நிற்கவே நிஜமும்
    நித்தம் கனாகொள்ளும்...
    அவள் கண்களின் பொதிந்திருக்கும்
    அதிசயத்தை என்னென்று
    கண்டறிய என் ஆயுள் முழுதும்
    கொடுத்தாலும் அறியமுடியாது...
    கல்லினை கூட ஈர்க்கும் காந்தமென
    என் மனம் பறிக்க அவள் விழி
    ஒன்றே போதும் எனை
    கடல் கடந்து உலகின் மறுமுனை
    தாண்டியும் ஈர்க்க....