sakthi_veeraa

தீரா காதல் வீரா

Grid View
List View
  • sakthi_veeraa 2d

    இலைகளுக்கு
    வேர்த்தாலும்
    வேர்கள்தான்
    தண்ணீர் குடிக்கின்றன...!
    என்னவள்
    கலங்கினாலும்
    கண்ணீர் என்னவோ
    என்னுள்தான் பிறக்கின்றன...!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 2d

    நீ சிந்தும்
    மொழியனைத்தும்..!
    நான் வேண்டிய
    தமிழென்றே
    தோன்றுதடி..!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 2d

    உன்னைத் தொடுவதும்
    அதில் தொடர்வதும்
    உன்னுள் முடிக்கும்
    என்னுயிர் தொடக்கம்...!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 2d

    முடியுமென்றால்
    மெத்தையாகிவிடு...!
    முடியாதென்றால்
    போர்வையாகிவிடு..!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 4d

    உன்
    விழிகள்
    விடியலுக்காக
    காத்திருக்க..!

    என்
    விழிகளோ
    விடியலே
    நீயென
    காத்துக்கிடக்கின்றது...!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 4d

    இல்லாத
    இடத்தில்
    இதமான
    இருக்கை
    இதயமே
    இவளது
    இதில்
    இருப்பது
    இனி வேறேது...!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 4d

    உன்
    முனகல் சத்தத்தில்
    முழுதாய் மூழ்கி
    புதிதாய் பிறக்கிறேனடி...!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 4d

    இழந்தவை யாவையும்
    தவழ்ந்தே பெருகிறாள்..!
    என்மடி தவழ்ந்தே
    குழைகிறாள்...!!
    தாயென சுமக்கும்
    வருமொன்று தருகிறாள்..!!!

    எனக்கான
    கதைகளும் கவிகளும்..!
    உன்
    புன்னகையில் தான்
    புதைந்து கிடக்கிறது..!

    மண்ணின்
    முதல் மழையென
    உன் வாசம் தீண்டவே
    கரு கொண்டேன்
    உடல் உயிர்கொண்டேன்..!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 4d

    உன்
    ஈரக்கூந்தலுக்குள்
    வண்ண மலராய்
    வாசம் செய்ய வந்தேன்..!
    இடையறா தொடுத்த
    நறிய மலரினுள்
    சுகம் காணும்
    நாராய் நானும்
    உன்னுள் தவழ்ந்தே
    உயிர் வாழ்கிறேன்...!!
    ©sakthi_veeraa

  • sakthi_veeraa 1w

    உன்னை
    தேடியே
    நோவதென்றால் ..!
    உயிரும்
    ஒரு நோயே..!!
    உடலும்
    ஒரு தீவே..!!!
    ©sakthi_veeraa