sandypeter

19 october❤ lyricist ❤��️nature love���� Insta id sandi_peetar_tamil_

Grid View
List View
 • sandypeter 5w

  துரோகம்

  காதல் என்று சொல்லி பழகும் சிலரிடம் கற்றுக்கொண்டேன் வாழ்க்கைக்கு தேவையான ஒரு தந்திரத்தை (துரோகம்) ♥️♥️♥️
  ©sandypeter

 • sandypeter 6w

  பௌர்ணமி

  நானும் என் நண்பனும் தெருவில் உரையாடி சென்றுகொண்டிருந்தோம் ;நிலவின் ஒளி என் கண்களை கூச நான் என் நண்பனிடம் கூற ,அவனோ முட்டாளே இன்று அமாவாசை என்று கடிந்துரைக்க நானோ அவள் முகத்தை கண்ட என் கண்களுக்கு மட்டும் தெரியும் இன்று பௌர்ணமி என்று என் மனதுடன் குறுநகைத்துக்கொண்டேன்சிறு புன்னகையுடன்
  ©sandypeter

 • sandypeter 7w

  என்னவள்

  காதல் இல்லை என்று சொன்னவனுக்கு கவியிலே காதல் புகுத்தியவள் கவி என்று பிதற்றியவனுக்கு காதல் தான் கவி என்று உணர்த்தியவள். தமிழ் தான் உயிரென்று சொன்னவனுக்கு தமிழர் தான் அதற்கு சான்று என நிரூபித்தவள் இனி கவி எழுத மாட்டேன் என்றிருந்தவனுக்கு காதலையே பரிசாக அளித்து இக்கவியை எழுத வைத்த என்னவளுக்கு நன்றி. அச்சமுற நானும் காத்திருக்க நீ எவ்வாறு ஏற்பாய் என் கவியை என்று❤❤❤
  ©sandypeter

 • sandypeter 9w

  வலி

  அம்மாவிடம் அடம்பிடித்து அடிவாங்கியதும்,தவறாக கணக்கு போட்டு அப்பாவிடம் அடிவாங்கியதும் ;அறிவற்ற அறிவியல் ஆசிரியரிடம் அடிவாங்கியதும்,ஓட்ட பந்தயத்தில் கீழே விழுந்து அடிபட்டதும் ,உன்னால் என்னை நானே காயப்படுத்தி கொண்டதும். பொய்யான வலிகள் என்று புரிந்தது நீ என்னிடம் பேசாமல் விட்டு சென்ற நொடிகளில்

 • sandypeter 9w

  love

  I am think that love is about,chatting ,kissing or calling but it's realy about think someone in everysecond

 • sandypeter 9w

  laughing

  I remember her làughing and forgetting to laugh❤❤

 • sandypeter 9w

  நோயாளி நான்

  நோயாளியை காண சென்ற நானும் நோயாளியாக மாறி நின்றேன் நீ மருத்துவம் பார்ப்பாய் என்பதற்காகவேஆம் காதல் என்ற நோய் தொற்றியது உன் அழகான கண்களை கண்ட பிறகு.❤❤

 • sandypeter 10w

  தவறு

  அழகிய கோபக்காரி கோபமும் கொண்டாளே என் மீது ,கோபித்துக்கொள் என்று கூறினேன் குழந்தையின் கோபம் கொஞ்சுவதற்கு முன் என்று அறிந்ததால்; தவறு என்று கருதினாலே எது தவறு? செய்தது தவறோ? சொன்னது தவறோ? பேசியது தவறோ? நின் முகம் காணாதது தவறோ? அன்பு கொண்டது தவறோ? அக்கறை கொண்டது தவறோ? விளையாட்டாய் செய்தது தவறோ? வேடிக்கை செய்யதது தவறோ? வியப்பில் ஆழ்த்தியது தவறோ? வியந்து போனது தவறோ? கவி எழுதியது தவறோ? நின் மீது காதல் மயக்கம் கொண்டது தவறோ? அறியாமல் செய்த இவையாவும் தவறு என்றால் அறிந்தே செய்வேன் மீண்டும் தவற்றை: நீ தவறு என்று சுட்டுவதற்காகவே
  ©sandypeter

 • sandypeter 10w

  (பூ)ச்செடி காதல்

  காதலும் கொள்ளாத நானும் உன்மீது காதலும் கொண்டேன் ஏனோ? அம்மா வேண்டாம் என்று சொல்லியும் அடம்பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தேன் புது பெண் போல உன்னை,வலது கால் எடுத்து வைக்கவில்லை ஏனோ? என் இரு கைகளும் தாங்கி கொண்டதாலோ மாடியில் வைத்த உன்னை மணி நேரம் கூட பாராமல் பாதுகாத்தேன் ஏனோ? வெயிலில் நீ காயமால் இருக்க குழந்தை ஈன்றெடுக்காத நானும் தாய் போல தினமும் குளிப்பாட்டியது ஏனோ? அடிக்கும் காற்றில் நீ சாய்ந்து விடுவாய் என எண்ணி நான் வேலி போல் நின்றது ஏனோ?மழைநீரில் கரைந்துவிட கூடாதென்பதற்கு குடைபோல் காத்து நின்றது ஏனோ? காயங்களை உன்னுடன் பறிமாறியது ஏனோ? உன் இழை அசைவில் மகிழ்வித்தாய் என்னை ஏனோ? ஒரு பெண்ணிடம் பேச உன்னிடம் ஒத்திகை பார்த்து ஏனோ? என்னவளை விட என்னிடம் அதிகம் பேசியது ஏனோ? காலை ஒருமுறை மாலை ஒருமுறை உரமிட்டு நீர்பாச்சியது ஏனோ? ஏனோ என்ற கேள்விகளுக்கும் நான் பட்ட இன்னல்களும் ஒற்றை நொடியில் மறைந்து போனது என் செடிகாதல் (பூ)ச்செடிகாதலாக மாறும் தருவாயில்,,,,,,,,,
  ©sandypeter

 • sandypeter 11w

  On(off)line? காதல்

  அவள் இல்லாதபோது தனிமை போக்க வழித்தெரியாமல் பித்தன் போல் எழுதும் பிதற்றல் இது,....
  யார் அவள்? நான் பிதற்றுவதற்கு
  பதில் கொடுக்க தொடங்கியது என் மனம்......
  "என்னவள் அவள் என்னவன் நான் இல்லை என்றாலும்
  என்னவள் அவளே"
  அழகிய கோபக்காரி, அன்பான கோள்மூட்டி.
  தமிழும் மறந்துபோனது அவளின் இரம்மிய பேச்சால், எனக்காக எதையும் செய்வாள், அவள் எனக்கானவள் என்றும் அறியும்முன்பே.புகைப்படம் கேட்டால் நம்பிக்கை வரட்டும் என்று புன்னகைப்பால் நம்பிக்கை வந்த பிறகும் புகைப்படத்தை நினைப்பதில்லை ஏனோ?
  அவளுடைய தொலைபேசி எண்ணும் தெரியாது அவளிடம் தொலைந்து போன என் மனதிற்கு தொடர்ந்து எண்ணுகிறேன் நட்சத்திரத்தின் எண்ணிக்கையை இரண்டும் சாத்தியமற்றது என அறிந்தும்.
  காதல் என்று சொன்னால் சரி என்பால் மீண்டும் சொன்னால் சாரி(sorry) என்று சொல்லி சரிசெய்வாள்.. இவை யாவும் அறிந்தும் காதல் கொள்ளும் இன்ஷ்டாகிறாம்( Instagram) காதலன்❤️❤️❤️