Grid View
List View
Reposts
  • vidhyakrishnan 1d

    என்னவனின் சிந்தனைகளில் நான் மூழ்கும் போதெல்லாம் என்னை வந்து அணைத்து கொள்ளும் பூங்காற்றே!!!
    அடுத்து முறை வரும்போது உன்னோடு என்னவனையும் அழைத்துவந்து என்னோடு சேர்ந்து விட்டு போ....
    ©vidhyakrishnan

  • vidhyakrishnan 3d

    சோகம் என்பது
    மகிழ்ச்சி நீருக்காக
    நமக்குள் சுரக்கும் தாகம்..

  • vidhyakrishnan 2w

    எனது குறும்புத்தனமும்,குழந்தைதனமும் செயலற்று போகிறது‌..
    உந்தன் விழிகளின் சத்தமில்லா தீண்டலிலே....
    ©vidhyakrishnan

  • vidhyakrishnan 2w

    என்‌ அமைதிற்குள் ஒளிந்திருக்கும் பேரிரைச்சல் நீ...
    என் சிரிப்பின் பின் இருக்கும் சோககீதம் நீ...
    என் கண்ணீரில் கரைந்திருக்கும் ஆறாத ரணம் நீ....
    என் கோபத்தில் மறைந்திருக்கும் சொல்லமுடியா காரணம் நீ‌...
    என் தூக்கத்திலும் உறங்காத நினைவு நீ..‌
    என் குறும்புத்தனத்தில் புதைந்திருக்கும் குழந்தைத்தனம் நீ...
    என் பயத்தின் பின் இருக்கும் தைரியம் நீ....
    என் கவிதையில் மறைந்திருக்கும் கற்பனைக்கு எட்ட காதல் நீ‌...
    என் ‌அளப்பரியா சந்தோஷத்தில் ஒளிந்திருந்த ஆர்ப்பாட்டம் நீ....
    என் தோல்வியில் கண்ட வெற்றி நீ‌.‌..
    என் ஏமாற்றத்தில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ....

    Read More

    ©vidhyakrishnan

  • vidhyakrishnan 3w

    எனது பலமும்,பலவீனமும் நீயாகி போனதால்...
    எனது உயிரும் உணர்வும் உனதாகி போனதடா கண்ணா...
    ©vidhyakrishnan

  • vidhyakrishnan 4w

    தனிமையில் உன் துணை இல்லாமல் தவிக்கும் வேளையில்...
    உன்‌ நினைவுகளில் முழ்கி என் கண்கள் என்னையறியாமல் கண்ணீர்‌ சிந்துகிறது...
    என்னை தேற்ற நீ இல்லை என‌ தெரிந்தும் காட்டாற்று வெள்ளமாய் மாறி கட்டுபடுத்த முடியாமல் வழிந்தோடும் கண்ணீருக்கு உன் இதழ் திறந்து ஏதேனும் வழி சொல்வாயா என் கண்ணா...
    ©vidhyakrishnan

  • vidhyakrishnan 5w

    இருவரும் பேசுகையிலே உணர்வுகளின் பிடியில் நாம்.....
    பேசாமல் தனித்திருக்கையிலே நினைவுகளின்‌ பிடியில் நாம்...
    ©vidhyakrishnan

  • vidhyakrishnan 5w

    நீ கேட்டு ரசித்த பாடல்களை எல்லாம்...
    நான்‌ கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் உதட்டில் உதிக்கும் குறுநகை என்னுள் ஏதோவொன்றையை உணர்த்திவிட்டு போகின்றது‌....
    ©vidhyakrishnan

  • vidhyakrishnan 9w

    கற்பனைகளில் மிதந்து
    கவிதைகளில் புரண்டு
    அலைபேசி அழைப்பில் ஆனந்தம் கொண்டு
    முடிவில்லா பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளியாய் முத்தத்தை கையூட்டாக பெற்று
    குறுஞ்செய்திகளில் குறும்புகள் செய்து
    எட்ட‌ நின்று ஏக்கமாய் பார்த்து வாழும் இந்த வாழ்க்கை போதுமடா...
    ஊர் அறிய உன்‌ கரம் பற்றி உன்னவளாகி...
    அனுதினமும் உன் சின்ன சின்ன சிண்டலிலும் அன்பிலும் திக்குமுக்காடி
    காற்றை போல் உன் வாசம் எப்போதும் எந்தன்‌மீது ஒட்டி உறவாடி
    சண்டைக்கும் சமாதானத்திற்கும் முத்தத்தையே தண்டனையாக பெற்று...
    காலை முதல் உன்னை இம்சித்து இரவில் அனைத்தும் மறந்து ஒன்றும் அறிய மழழையாய் மாறி உன் மார்பினில் துயில் கொள்ளும் நாளை எண்ணி காத்திருக்கிறாள் இந்த பேதை...

    Read More

    ©vidhyakrishnan

  • vidhyakrishnan 9w

    காற்றினில் கலந்திடும் உன் மூச்சுக்காற்றை எல்லாம் ....
    அன்னப்பறவை போல் பிரித்து நான் சுவாசித்து உயிர் வாழும் வரம் வேண்டுமடா என் கண்ணா...
    ©vidhyakrishnan